நவிமும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 18 வங்கதேசத்தினர் கைது

Update:2023-03-05 00:15 IST

மும்பை, 

நவிமும்பை கன்சோலி பகுதியில் உள்ள கட்டிடத்தில் திருமண நிகழ்ச்சியில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் கலந்து கொள்ள இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று நடத்திய கண்காணிப்பில் சந்தேகம் படும்படியாக 18 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் 10 பெண்கள், 8 ஆண்கள் ஆவர். இவர்கள் கடந்த ஒரு வருடமாக விசா மற்றும் பாஸ்போர்ட் இன்றி அந்த பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் 18 பேரை கைது செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்