காந்திவிலியில் போலீஸ் உளவாளியை கொன்ற 2 பேர் கைது

காந்திவிலியில் போலீஸ் உளவாளியை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-07-27 21:34 IST

மும்பை,

காந்திவிலியில் போலீஸ் உளவாளியை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளவாளி கொலை

மும்பை காந்திவிலி பொய்சர் பகுதியை சேர்ந்தவர் தீபக் ராஜ்பர் (வயது30). இவர் கடந்த 25-ந்தேதி காலை பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இது பற்றி அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சம்ந்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிணமாக மீட்கப்பட்ட தீபக் ராஜ்பர் போலீஸ் உளவாளி என தெரியவந்தது.

15 நாட்களுக்கு முன்பு வாகன நிறுத்தம் தொடர்பாக சோனு சவுத்ரி (20), ஆதித்யா சவுபே (21) மற்றும் இன்னொரு கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி அறிந்த தீபக் ராஜ்பர் சண்டையை விலக்க முன்வந்தார்.

2 பேர் கைது

இருப்பினும் சண்டை முற்றி கடையின் கண்ணாடிகள், வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் தீபக் ராஜ்பர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சிலரை பிடித்து சென்றனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி தங்கள் மீது புகார் அளித்த ஆத்திரத்தில் கும்பலை சேர்ந்த சோனு சவுத்ரி, ஆதித்யா சவுபே உள்பட பலர் சேர்ந்து அவரை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

...............................

----

Tags:    

மேலும் செய்திகள்