வாலிபரை குத்தி கொன்ற 2 சிறுவர்கள் பிடிபட்டனர்

Update:2023-05-10 00:15 IST

மும்பை, 

மும்பை காட்கோபர்-மான்கூர்டு லிங்க் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் காலை கத்தி குத்து காயங்களுடன் வாலிபர் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியானவர் ரம்ஜான் அப்துல் ஹமீத் (வயது22) எனவும், கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பலத்த கத்தி குத்து காயங்கள் இருந்ததால் அவரை மர்மஆசாமிகள் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் 2 சிறுவர்கள் சேர்ந்து வாலிபரை கொலை செய்ததாக தெரியவந்தது. போலீசார் 2 சிறுவர்களை பிடித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்