போலி ஊழியர்கள் மூலம் ரூ.2¾ கோடி மோசடி- விசாரணைக்கு உத்தரவு

Update:2023-04-14 00:15 IST

மும்பை, 

நவிமும்பையில் செயல்பட்டு வரும் சிட்கோ நிறுவனத்தில் போலி ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தி அந்த பணத்தை எடுத்து மோசடி நடந்து வருவதாக சிட்கோ நிர்வாக இயக்குநர் சஞ்சய் முகர்ஜிக்கு புகார் வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிட்கோவில் பணியாற்றுவதாக 28 பேரை காட்டிய சம்பவம் வெளியே தெரியவந்தது.

இந்த மோசடியில் மனிதவளத்துறை அதிகாரியும் உடந்தையாக இருந்துள்ளார். அவரது கையெழுத்து மூலம் ரூ.2 கோடியே 80 லட்சம் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. மோசடி குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்