விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி வெளிநாட்டு பணத்துடன் 2 பயணிகள் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி வெளிநாட்டு பணத்துடன் 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-11 00:15 IST

மும்பை, 

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி வெளிநாட்டு பணத்துடன் 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

ரூ.1.15 கோடி அமெரிக்க டாலர்

மும்பையில் இருந்து பாங்காக்கிற்கு சம்பவத்தன்று 2 பயணிகள் செல்ல இருந்தனர். விமான புலனாய்வு பிரிவினருக்கு அந்த பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அதிகாரிகள் அவர்களின் உடைமைகளில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களின் பையில் இருந்து ரூ.1.15 கோடி மதிப்பிலான 1.41 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாட்டை சேர்ந்தவர்கள்

இதையடுத்து அதிகாரிகள் வெளிநாட்டு பணத்துடன் பிடிப்பட்ட 2 பயணிகளையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஜப்பானை சேர்ந்த மகோடா டனி (47), தாய்லாந்தை சேர்ந்த குன்யாபுன்யிசா பூன்னாசெட் (41) என்பது தெரியவந்தது. அதிகாரிகள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு 2 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்