எல்கர் பரிஷத் வழக்கில் 2 சமூக ஆர்வலர்கள் ஜாமீனில் விடுவிப்பு; 5 ஆண்டுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தனர்

புனே எல்கர் பரிஷத் வழக்கில் கைதான 2 சமூக ஆர்வலர்கள் 5 ஆண்டுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்

Update: 2023-08-05 20:00 GMT

மும்பை, 

புனேயில் உள்ள பீமா- கோரேகாவ் போர் நினைவு சின்னத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்துக்கு முந்தையநாள் எல்கர் பரிஷத் பகுதியில் நடைபெற்ற பொதுகூட்டம் தான் காரணம் என போலீசார் குற்றம் சாட்டினார். இதில் கலந்துகொண்ட சுமார் 16 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களான வெர்னோன் கன்சால்வெஸ், அருண் பெரிரா ஆகியோர் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சுமார் 5 ஆண்டுகளை சிறையில் கழித்த அவர்களுக்கு கடந்த 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் நேற்று அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரும், சமூக ஆர்வலர்களும் சிறைவாசலில் அவர்களை வரவேற்க காத்திருந்தனர். இந்த வழக்கில் கைதான வக்கீல்கள் ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ் ஆகியோர் ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்தனர். கவிஞர் வரவரராவ் உடல்நலக்குறைவு காரணமாக ஜாமீனில் உள்ளார். மற்றொவரான கவுதம் நவ்லகா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்