சம்பாஜி நகர்,
சம்பாஜி நகர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை சம்பவத்தன்று ஒரு கும்பல் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்தது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த அவலம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த நபர்களை பிடிக்க விசாரணை நடத்தினர். இதில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சிறுமி கொடுத்த தகவலின் படி முதற்கட்டமாக 4 சிறுவர்கள் பிடிபட்டனர். இதில் தொடர்புடைய மற்ற 2 பேரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.