தாண்டியா நிகழ்ச்சிக்கு போலி பாஸ் தயாரித்த 4 பேர் கைது

தாண்டியா நிகழ்ச்சிக்கு போலி பாஸ் தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ரூ.35 லட்சம் உபகரணங்கள் பறிமுதல் செய்யபட்டன

Update: 2023-10-16 19:15 GMT

மும்பை, 

மும்பையில் நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தாண்டியா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் துர்காதேவி நவராத்திரி உத்சவ் சமிதியின் தாண்டியா நிகழ்ச்சி மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ. சினில் ரானேவின் ரங்கராத்ரி தாண்டியா நிகழ்ச்சிக்கு போலி பாஸ்களை தயாரித்து சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில் போலீசார் விரார் பகுதியில் உள்ள கரண் அஜய் ஷா(வயது29) என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அவர் வீட்டில் இருந்து 1,000 நுழைவு சீட்டுகள், ஒரு மடிக்கணினி, பிரிண்டர் மற்றும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து போலி பாஸ்களை தயாரித்த கரண் அஜய் ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் கிராபிக் டிசைனர் தர்ஷன் பிரவின் கோகில்(24), பரேஷ் சுரேஷ் நெவ்ரேக்கர்(35), கவிஷ் பால்சந்திர பாட்டீல்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் விரார், காந்திவிலி, மலாடு, மனோரி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்