புனே சசூன் ஆஸ்பத்திரியில் `மோக்கா' கைதியை கொல்ல முயன்ற 5 பேர் பிடிபட்டனர்

புனேயில் அரசு நடத்தும் சசூன் ஆஸ்பத்திரியில் `மோக்கா' கைதியை கொல்ல முயன்ற 5 பேர் பிடிபட்டனர்

Update: 2022-09-08 12:07 GMT

புனே,

புனேயில் அரசு நடத்தும் சசூன் ஆஸ்பத்திரியில் மோக்கா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட துஷார் ஹம்பீர் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது பாதுகாப்பிற்காக போலீஸ்காரர் பணியில் இருந்தார். கடந்த 5-ந்தேதி இரவு ஆஸ்பத்திரியில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதத்தால் தாக்க முயன்றனர். இதனை கண்ட போலீஸ்காரர் உள்பட 2 பேர் சேர்ந்து கும்பலின் கொலை முயற்சியை தடுத்தனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து துஷார் ஹம்பீரை தாக்க முயன்ற கும்பல் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

இதில் முன்விரோதம் காரணமாக அவரை தாக்க முயன்றதாகவும், இக்கும்பல் சிங்காட் சாலை பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் பந்த்கார்டன் போலீசார் அங்கு சென்று 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, வாள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்