அந்தேரி வணிக வளாகத்தில் ரூ.8½ கோடி போதைப்பொருள் பறிமுதல்

Update:2023-03-18 00:15 IST

மும்பை, 

மும்பை அந்தேரியில் உள்ள வணிக வளாகத்தில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 15 கிலோ 743 கிராம் எடையுள்ள கேட்டமைன் மற்றும் 23 ஆயிரத்து 410 தடை செய்யப்பட்ட ஸ்ட்ரிப்ஸ் என்ற மற்றொரு போதைப்பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 கோடியே 50 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த விஜய் ரானே, முகமது அஸ்லம் சேக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இவர்கள் வெளிநாட்டிற்கு கடத்த முயன்றது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்