பர்பானி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
மும்பை பர்பானி அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்;
மும்பை,
பர்பானி மாவட்டம் மான்வாத் தாலுகா உக்கல்காவ் பகுதியில் குடிநீருக்காக தோண்டப்பட்டு இருந்த ஆழ்துளை கிணறு பயன்பாடு இன்றி திறந்த நிலையில் கிடந்தது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.