சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் மீது வழக்கு

நவிமும்பையில் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்;

Update:2023-09-16 01:15 IST

நவிமும்பை, 

நவிமும்பை பன்வெல் தாலுகா பகுதியை சேர்ந்தவர் பாலா (வயது20). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். சில சமயங்களில் சிறுமியிடம் சண்டை போட்டு துன்புறுத்தி வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சிறுமி கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்துகொண்டாள். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 13-ந்தேதி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் பாலா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்