கசாரா அருகே என்ஜின் கோளாறால் நடுவழியில் நின்ற சரக்கு ரெயில்; பயணிகள் ரெயில் சேவை பாதிப்பு

கசாரா அருகே என்ஜின் கோளாறால் நடுவழியில் நிறுத்தப்பட்ட சரக்கு ரெயிலால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர்;

Update:2023-09-27 00:30 IST

மும்பை, 

கசாரா அருகே ஒம்பர்மல்லி - கார்டி ரெயில் நிலையம் இடையே நேற்று காலை 11.20 மணியளவில் சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென என்ஜின் கோளாறு காரணமாக ரெயில் நடு வழியில் நின்றது. தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் நடுவழியில் நின்ற சரக்கு ரெயிலை, மாற்று என்ஜின் மூலம் அங்கு இருந்து மும்பை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரெயில் நடுவழியில் நின்றதால் நேற்று காலை நேரத்தில் கசாரா- சி.எஸ்.எம்.டி. மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த ரெயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல மும்பை நோக்கி வந்த புவனேஷ்வர்- எல்.டி.டி., துலே- தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் பாதியில் நின்றது.

Tags:    

மேலும் செய்திகள்