மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலி
குண்டும், குழியுமான சாலையால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலியானார்.;
தானே,
குண்டும், குழியுமான சாலையால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலியானார்.
குண்டும், குழியுமான சாலை
தானே மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் அம்பர்நாத்தை சேர்ந்த அங்கித் தாய்வா (வயது26) என்பவர் நவிமும்பை கன்சோலிக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கட்டாய்-பத்லாப்பூர் இடையே கோனி கிராமம் அருகே குண்டும் குழியுமாக கிடந்த சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் அவர் தவறி விழுந்தார்.
பரிதாப சாவு
அப்போது கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி பஸ் ஒன்று சாலையில் விழுந்து கிடந்த அங்கித் தாய்வா மீது ஏறி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இது குறித்து தகவல் அறிந்த மான்பாடா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.