சாகச பயணம் செய்தபோது மின்சார ரெயிலில் தவறி விழுந்து வாலிபர் படுகாயம்

மின்சார ரெயிலில் சாகச பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

Update: 2022-06-24 17:08 GMT

மும்பை, 

மின்சார ரெயிலில் சாகச பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

வீடியோ பரவியது

தானே கல்வா குடிசைப்பகுதியை சேர்ந்த தனிஷ் ஹூசேன் (வயது18). இவர் சமீபத்தில் கல்வா - தானே இடையே ரெயிலில் பயணம் செய்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வாலிபர் ரெயில் இருந்து விழுத்து படுகாயம் அடைந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் மின்சார ரெயிலில் மோட்டார் பெட்டியின் வெளியே உள்ள கம்பியை பிடித்து தொங்கியபடி சாகசம் செய்யும் அந்த வாலிபர் ஒரு கட்டித்தில், எதிர்பாராத விதமாக தண்டவாளத்தின் ஓரத்தில் உள்ள இரும்பு கம்பி மீது மோதி ரெயிலில் இருந்து பிடி நழுவி கிழே விழுகிறார்.

நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கோரிக்கை

வாலிபருடன் மேலும் சிலரும் மின்சார ரெயிலில் சாகச பயணம் மேற்கொண்டனர். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் கீழே விழவில்லை.

ரெயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்சார ரெயிலில் சாகச பயணங்களில் ஈடுபட வேண்டாம் என மத்திய ரெயில்வே வலியுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்