இந்து கடவுள் குறித்து இழிவாக பதிவிட்டவர் கைது

இந்து கடவுள் குறித்து இழிவாக பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-05-19 18:19 IST

நாக்பூர், 

நாக்பூர், கணேஷ் பெத் பகுதியில் வசித்து வருபவர் சாருதத்தா ஜிகர்(வயது 35). ஆடியோ பதிவு கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் கோர்ட்டு உத்தரவின் பேரில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். மேலும் இந்து கடவுளான சிவபெருமான் குறித்து அவர் இழிவாக கருத்துகளை பதிவிட்டு இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சிலர் போலீசில் புகார் அளித்து இருந்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சாருதத்தா ஜிகரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்