கணபதி திருவிழாவிற்காக கூட்டத்தை திரட்டி வராத வாலிபர் மீது தாக்குதல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கணபதி சிலை ஊர்வலம் நிகழ்ச்சிக்காக கூட்டத்தை திரட்டி வராத வாலிபர் மீது தாக்குதல்;

Update:2022-09-01 18:57 IST

அம்பர்நாத்,

கல்யாணை சேர்ந்தவர் சத்யம் சோகானி(வயது 18). இவர் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விநாயகர் சதுர்த்தியையொட்டி கணபதி சிலை ஊர்வலம் நிகழ்ச்சிக்காக கூட்டத்தை அழைத்து வருவதாக உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி தினவிழா நெருங்கியதையொட்டி கூட்டத்தை திரட்டி வர சத்யம் சோகானியை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் அழைப்பை எடுக்காமல் இருந்து உள்ளார். ஆத்திரமடைந்த சிலர் நேற்று சத்யம் சோகானியின் வீட்டிற்கு சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவரை தாக்கிய கும்பலை சேர்ந்த 4 பேரின் அடையாளம் தெரியவந்தது. இருப்பினும் யாரையும் கைது செய்யவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்