மந்திரி தீபக் கேசர்கரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி - தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கைது

மந்திரி தீபக் கேசர்கரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-18 19:15 GMT

மும்பை, 

மந்திரி தீபக் கேசர்கரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டார்.

பணம் பறிக்க முயற்சி

மராட்டிய கல்வி மந்திரியாக இருப்பவர் சிவசேனாவை சேர்ந்த தீபக் கேசர்கர். இவரை தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஒருவர் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கூறப்பட்டது. இதுபற்றி மந்திரியின் ஆதரவாளர் ஒருவர் மலபார்ஹில் போலீசில் புகார் அளித்தார். அதில், "தகவல் அறியும் உரிமை ஆர்வலரான சம்பந்தப்பட்ட நபருக்கு மந்திரி தீபக் கேசர்கரை கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தெரியும். அந்த நபர் மந்திரியை மிரட்டி பணம் கேட்டு வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கைது

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தகவல் அறியும் உரிமை ஆர்வலரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்