பிவண்டியில் பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி

பிவண்டியில் பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்.;

Update:2023-07-31 00:15 IST

மும்பை, 

பிவண்டியில் பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

மழை நீரில் மூழ்கினர்

தானே மாவட்டம் பிவண்டி, சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சானிப் அன்சாரி (வயது17). அவரது நண்பன் அன்சாரி அலி சேக் (16). வாலிபர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மொகரம் ஊர்வலத்தை காண சென்றனர். மாலை 5 மணியளவில் வாலிபர்கள் 2 பேரும் டோங்கர்பாடா பகுதியில் பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக வாலிபர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

2 பேர் பலி

இதை கவனித்த சிலர் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறினர். அந்த பகுதி மக்கள் தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வாலிபர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து பிவண்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பிவண்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்