பொதுக்கழிவறை அருகே கிடந்த பச்சிளங்குழந்தை உடல் மீட்பு
துர்பேயில் பொதுக்கழிவறை அருகே கிடந்த பச்சிளங்குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.;
மும்பை,
நவிமும்பை துர்பே கே.கே.ஆர். சாலையில் பொதுக்கழிப்பிடம் அருகே குப்பை குவியலில் சம்பவத்தன்று காலை 11.15 மணி அளவில் துணியால் பொதிந்த நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அக்குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த பச்சிளங்குழந்தையை வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.