மும்பையில் மணப்பெண் நகை, பணத்துடன் மாயமான வழக்கில் புரோக்கர் கைது

திருமணம் முடிந்த மறுநாளே மணப்பெண் நகை, பணத்துடன் மாயமான வழக்கில் போலீசார் திருமண புரோக்கரை கைது செய்து உள்ளனர்.

Update: 2023-06-12 18:45 GMT

மும்பை, 

திருமணம் முடிந்த மறுநாளே மணப்பெண் நகை, பணத்துடன் மாயமான வழக்கில் போலீசார் திருமண புரோக்கரை கைது செய்து உள்ளனர்.

நகை, பணத்துடன் மணப்பெண் மாயம்

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் 28 வயது மகனுக்கு திருமணத்துக்காக பெண் பார்த்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சில்வாசாவை சேர்ந்த திருமண புரோக்கர் கம்லேஷ் கதம், ஆஷா கெய்க்வாட் என்ற பெண்ணை மருந்துக்கடை உரிமையாளரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஆஷா கெய்க்வாட் திருமணம் முடிந்த மறுநாளே மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் இருந்த ரூ.4.3 லட்சம் பணம், தங்க நகைகளுடன் மாயமானார். மாயமான அவர், போன் மூலம் மருந்துக்கடைகாரர் மகனை தொடர்பு கொண்டு, 'எனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. நகை, பணத்துக்காக தான் திருமணம் செய்தேன்' என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

திருமண புரோக்கர் கைது

இது குறித்து மருந்துக்கடை உரிமையாளர் மலாடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்துடன் மாயமான பெண்ணை தேடிவந்தனர். இந்தநிலையில் மோசடியில் திருமண புரோக்கர் கம்லேஷ் யாதவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் நடந்து 1 ஆண்டுக்கு பிறகு போலீசார் திருமண புரோக்கர் கம்லேஷ் யாதவை கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆஷா கெய்க்வாட்டை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்