ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - புனே அருகே பரிதாபம்

புனே அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-10 18:45 GMT

மும்பை, 

புனே அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு போல மராட்டியத்திலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அஜித்பவார் வலியுறுத்தினார். ஆனால் மராட்டியத்தில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கார் டிரைவர் தற்கொலை

இந்தநிலையில் மராட்டியத்தில் கார் டிரைவர் ஒருவரின் உயிரை ஆன்லைன் சூதாட்டம் பறித்து உள்ளது. புனே மாவட்டம் மாவல் தாலுகா தாலேகாவ் தப்கதே பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சோம்நாத்(வயது27). கார் டிரைவர். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். சமீபத்தில் அவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.20 ஆயிரத்தை இழந்தார். வீட்டு செலவுக்காக வைத்து இருந்த பணத்தை இழந்ததால், மிகுந்த மனவேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் புனேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்