சரத்பவாருக்கு கண்புரை அறுவை சிகிச்சை
சரத்பவாருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.;
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான அஜித்பவார் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் சரத்பவார் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் கண்புரை அறுசை சிகிச்சைக்காக மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக அஜித்பவார் கூறியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சரத்பவாருக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு 82 வயதான மூத்த தலைவரான சரத்பவார் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். இந்த தகவலை கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.
சமீபத்தில் சரத்பவாருக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மற்றொரு கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.