கொரோனா சிகிச்சை மைய ஒப்பந்தம்: போலி ஆவணங்கள் தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு

கொரோனா சிகிச்சை மைய ஒப்பந்தத்துக்கு போலி ஆவணங்கள் தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update:2022-08-24 20:18 IST

மும்பை, 

மும்பை பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.பி. கிரித் சோமையா அண்மையில் ஆசாத் மைதான் போலீசில் புகார் ஒன்று அளித்தார். இந்த புகாரில் லைப்லைன் ஆஸ்பத்திரி மேலாண்மை சேவை நிறுவனம் மற்றும் டாக்டர் ஹேமந்த் குப்தா, சுஜித் பட்கர், சஞ்சய் மதன்லால், ராஜூ சாலுங்கே ஆகியோர் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு ஒப்பந்தம் பெறுவதற்காக போலி ஆவணங்கள் சமர்பித்ததாக குற்றஞ்சாட்டினார்.

இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் சிகிச்சை மைய பங்குதாரர்களாக போலி ஆவணங்களை மாநகராட்சியிடம் சமர்ப்பித்து உள்ளனர். பின்னர் என்.எஸ்.இ.எல், ஒர்லி, முல்லுண்ட், தகிசர் ஆகிய இடங்களில் ஜம்போ கொரோனா சிகிச்சை முகாம் அமைக்க ஒப்பந்தங்களை பெற்றனர். மருத்துவ துறையில் எந்தவொரு அனுபவம் இன்றி ஒப்பந்தங்கள் பெற்ற இவர்கள் மாநகராட்சியிடம் ரசீதுகளை சமர்பித்து ரூ.38 கோடி வசூலித்ததும் தெரியவந்தது.

இவர்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மாநில அரசு உள்பட பொதுமக்களையும் ஏமாற்றி உள்ளனர். அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மற்றும் டாக்டர்களிடம் மருத்துவ சான்றிதழ்கள் இன்றி முறையான சிகிச்சை அளித்து உள்ளனர். இதன் மூலம் உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழந்து உள்ளதாக கண்டறியப்பட்டது. இதன்படி போலீசார் 4 பேர் மீதும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்