கள்ளக்காதலியின் 1½ வயது மகனை வெந்நீரில் தூக்கிப்போட்டு கொலை- வாலிபர் வெறிச்செயல்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியின் 1½ வயது மகனை வெந்நீரில் தூக்கிப்போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
புனே,
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியின் 1½ வயது மகனை வெந்நீரில் தூக்கிப்போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல்
புனே மாவட்டம் சகான் அருகே உள்ள பிம்பல்காவ் பகுதியை சேர்ந்தவர் விக்ரம்(வயது34). இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணை காதலித்து வந்தார். மேலும் அவரை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அந்த பெண் தனக்கு 1½ வயதில் குழந்தை இருப்பதை காரணம் காட்டி திருமணத்துக்கு மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் சம்பவத்தன்று கள்ளக்காதலியின் 1½ வயது மகனை கொதிக்கும் வெந்நீரில் தூக்கிப்போட்டார். பின்னர் அவர் சிறுவன் வெந்நீரில் தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடினார்.
பரிதாப சாவு
குடும்பத்தினரும் அவர் கூறியதை நம்பினர். காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். சுமார் 10 நாட்களுக்கு பிறகு சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தான்.
இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் விக்ரம் தான் கள்ளக்காதலியின் 1½ மகனை ஈவு இரக்கம் இல்லாமல் வெந்நீரில் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.