பசுக்களை பாதுகாக்க ஆணையம்- சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

சட்டசபையில் பசுக்களை பாதுகாக்க ஆணையம் அமைக்க மசோதா நிறைவேற்றப்பட்டது.;

Update:2023-03-25 00:15 IST

மும்பை, 

மராட்டிய சட்டசபையில் பசுக்கள் மற்றும் இதர கால்நடைகளை பாதுகாக்க 'கோசேவா அயோக்' என்ற பசு நல ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாப்பது, கறவை மாடுகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பது, உள்நாட்டு வகை கால்நடைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பது இந்த மசோதாவின் நோக்கம் ஆகும்.


Tags:    

மேலும் செய்திகள்