புனேயில் காற்று மாசு காரணமாக தினமும் 3-4 சிகரெட் புகைப்பது போல உள்ளது - சுப்ரியா சுலே எம்.பி. வேதனை

புனேயில் காற்று மாசு காரணமாக தினமும் 3-4 சிகரெட் புகைப்பது போல உள்ளதாக சுப்ரியா சுலே எம்.பி. வேதனை தெரிவித்து உள்ளார்.

Update: 2023-10-22 19:15 GMT

மும்பை, 

புனேயில் காற்று மாசு காரணமாக தினமும் 3-4 சிகரெட் புகைப்பது போல உள்ளதாக சுப்ரியா சுலே எம்.பி. வேதனை தெரிவித்து உள்ளார்.

அதிகரிக்கும் காற்று மாசு

மும்பை, புனேயில் சமீபத்தில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. தூரத்தில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காற்றில் தூசி படிந்து உள்ளது. காற்று மாசு காரணமாக மும்பை, புனே நகரில் பொது மக்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் புனேயில் அதிகரித்து உள்ள காற்று மாசு குறித்து தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி. கவலை தெரிவித்து உள்ளார்.

தினமும் 3-4 சிகரெட்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மும்பையில் இருந்து புனேக்கு இப்போது தான் வந்தேன். காற்று மாசு மிகப்பெரிய கவலையாக உள்ளது. மாசு நிறைந்த இந்த காற்றை சுவாசிப்பது, ஒரு நாளில் 3-4 சிகரெட்களை புகைப்பது போல உள்ளது. நமது மக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியவர்களின் நலன் அபாயத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் நிர்வாகமும் இந்த பிரச்சினையை எதிர்த்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்