அந்தேரி ரெயில் நிலையம் அருகே 4 கடைகளில் திடீர் தீ விபத்து

Update:2022-12-03 00:15 IST

மும்பை, 

மும்பை அந்தேரி ரெயில் நிலையம் மேற்கு பகுதியில் உள்ள கடை ஒன்றில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீயானது அடுத்தடுத்து அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடைகளில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து டி.என். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்