அவுரங்காபாத்தில் சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்; சிறுவன் உள்பட 6 பேர் கைது
அவுரங்காபாத்தில் சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
அவுரங்காபாத்,
அவுரங்காபாத் கன்னட் தாலுகா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 12-ந் தேதி அங்குள்ள பண்ணை வீட்டில் உள்ள நிலத்தில் விவசாய வேலை பார்த்து வந்தாள். அப்போது, சிறுவன் உள்பட 6 பேர் அங்கு வந்தனர். சிறுமி தனியாக வேலை செய்து வந்ததை கண்ட அவர்கள் பண்ணை வீட்டிற்கு கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இது பற்றி அறிந்த கிராமத்தினர் பண்ணை வீட்டிற்கு சென்றனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் உள்பட மற்றவர்கள் 18 வயது முதல் 33 வயதுயுடைய வாலிபர்கள் என தெரியவந்தது. கிராமத்தினர் கொடுத்த தகவலின் படி போலீசார் சிறுமியை கற்பழித்த 6 பேரை பிடித்து கைது செய்தனர். பின்னர் சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற 5 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.