மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் கிரேன் மோதி சிறுமி பலி

Update:2023-02-08 00:30 IST

மும்பை, 

மும்பை கோரேகாவ் கிழக்கு மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை கீர்த்தி யாதவ்(வயது15) மற்றும் அவரது சகோதரி மம்தா(17) ஆகியோர் தோழியுடன் ஸ்கூட்டரில் நைகாவ் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற கிரேன் வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். இதில், எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஸ்கூட்டருடன் சாலையில் விழுந்தனர். இதில் கிரேன் வாகனம் கீழே விழுந்த கீர்த்தியாதவ் மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவள் உயிரிழந்தாள். மற்ற 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தனர்.

தகவல் அறிந்த வன்ராய் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் ஸ்கூட்டரில் 3 பேரை வைத்து ஓட்டிய மம்தாவை கைது செய்தனர். மேலும் கிரேன் டிரைவர் அமர்சிங் யாத்வ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்