நவிமும்பை அருகே இளம்பெண்ணை கொன்று உடல் சாலையில் வீச்சு

நவிமும்பை அருகே இளம்பெண்ணை கொன்று உடலை சாலையில் வீசிய சென்ற ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update:2023-10-13 00:15 IST

நவிமும்பை, 

நவிமும்பை அருகே இளம்பெண்ணை கொன்று உடலை சாலையில் வீசிய சென்ற ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

இளம்பெண் உடல்

நவிமும்ைப பன்வெல் பகுதியில் உள்ள பலஸ்பே-சிவ்சம்போ நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் மதியம் இளம்பெண் ஒருவர் உடலில் காயத்துடன் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் பிணமாக கிடந்த இளம்பெண் பென் தாலுகா கடெஸ்பா கிராமத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீ(வயது19) எனவும், அவரை 2 நாட்களுக்கு முன்பு யாரோ கத்தியால் குத்தி கொலை செய்து உடலை வீசி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை கொலை செய்த ஆசாமி யார்?, இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலையாளிகளை அடையாளம் காண நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்