புனேயில் மைத்துனி, 2 குழந்தைகளை கொன்று உடல்களை எரித்த காவலாளி கைது

மைத்துனி, 2 குழந்தைகளை கொன்று உடல்களை எரித்த பண்ணை வீட்டு காவலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-04-13 01:00 IST

புனே, 

மைத்துனி, 2 குழந்தைகளை கொன்று உடல்களை எரித்த பண்ணை வீட்டு காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

படுகொலை

புனே கோந்துவா பகுதியை சேர்ந்தவர் வைபவ் வாக்மாரே. பண்ணை வீட்டின் காவலாளியாக இருந்து வந்தார். இவர் தனது காதலியான மைத்துனி அம்ரபாலி மற்றும் அவரது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் அம்ரபாலிக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சம்பவத்தன்று அவர் மைத்துனி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கொலை செய்தார். பின்னர் வீட்டு அருகே உள்ள காலியிடத்தில் படுக்கை விரிப்பு, துணிகளை போட்டு உடல்களை எரித்து உள்ளார்.

இது பற்றி அறிந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று உடல்களை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசில் சிக்கினார்

இத குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான வைபவை தேடி வந்தனர். மேலும் குழந்தைகளின் நோட்டு புத்தகத்தில் வைபவின் செல்போன் நம்பர் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து செல்போன் சிக்னலை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஹிண்டேவாடி சவுக் பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

போலீசார் அங்கு சென்றபோது வைபவ் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் பேரில் மைத்துனியை கொலை செய்ததாகவும், சாட்சியங்களை அழிப்பதற்காக உடல்களை எரித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்