4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது பற்றி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-24 20:15 GMT

மும்பை, 

4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது பற்றி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுட்டுக்கொலை

ஜெய்பூர்- மும்பை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஜூலை 31-ந் தேதி ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் சவுத்ரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் திடீரென தனது கையில் இருந்த தானியங்கி துப்பாக்கியால் தனது உயர் அதிகாரியான உதவி சப்- இன்ஸ்பெக்டர் திகாராம் மீனாவை சுட்டுத்தள்ளினார். பின்னர் ரத்தவெறி அடங்காத அவர், ரெயிலின் வெவ்வேறு பெட்டியில் இருந்த 3 பயணிகளை கொடூரமாக சுட்டுக்கொலை செய்தார். இதைத்தொடர்ந்து ரெயிலில் இருந்து குதித்து தப்பிஓடிய அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு மும்பை போரிவிலியில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது

குற்றப்பத்திரிகையில் தகவல்

இந்தநிலையில் ரெயில்வே போலீசார் சமீபத்தில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 1,206 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். விசாரணை காலக்கட்டத்தில் சேத்தன் சிங் சவுத்திரி மனநலம் பாதிக்கப்பட்டவராக கூறப்பட்டது. ஆனால் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டபோது சேத்தன் சிங் சவுத்ரியின் மனநிலை இயல்பானதாகவே இருந்ததாகவும், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதனை உறுதிப்படுத்த 150-க்கும் அதிகமான சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், ரெயில் பெட்டியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற இந்த தகவலால் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்