ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி

ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்;

Update:2023-10-20 00:45 IST

நவிமும்பை, 

கோலாப்பூரை சேர்ந்த 2 வாலிபர்கள் வேலை தேடிவந்தனர். இவர்களிடம் நவிமும்பையை சேர்ந்த அனிகேத் அதாவலே, அபிஜித் சாலுங்கே, அபிஜித் கோரே, சச்சின் ஜாதவ் ஆகிய 4 பேர் ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வாக்குறுதி அளித்தனர். இதனை நம்பிய 2 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பு மாதம் வரையில் வேலைக்காக ரூ.12 லட்சத்து 35 ஆயிரம் வரையில் அவர்களிடம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் அவர்களுக்கு பணி நியமன ஆணையை அவர்கள் அனுப்பி வைத்தனர். இதனை வைத்து விசாரித்ததில் அது போலியானது என தெரியவந்தது. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு அவர்களிடம் கேட்டனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட 2 பேரும் நவிமும்பை கண்டேஸ்வர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணமோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்