ஜோகேஸ்வரியில் கட்டுமான தொழிலாளியை அடித்து கொன்றவர் கைது

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் கட்டுமான தொழிலாளியை அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்;

Update:2023-08-10 00:45 IST

மும்பை, 

மும்பை ஜோகேஸ்வரி மேற்கு மினாரா டவர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் கடந்த 3-ந் தேதி 40 வயது ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். அந்தேரி போலீஸ் நிலையத்தில் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலை சரிபார்த்ததில் பிணமாக மீட்கப்பட்டவரின் அடையாளம் தெரியவந்தது. பிணமாக கிடந்தவர் கட்டுமான தொழிலாளி சார்கா புஜார் என தெரியவந்தது. இவரை சக தொழிலாளி கேரா ராய் என்பவர் அடித்து கொன்று உடலை தொட்டியில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கேரா ராயை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், சொந்த ஊருக்கு செல்வதில் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கேரா ராய் சார்கா புஜாரை கொலை செய்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்