மும்பை கடற்கரை சாலை திட்டப்பணிகள் 58 சதவீதம் முடிந்துவிட்டது- மாநகராட்சி தகவல்

மும்பை கடற்கரை சாலை திட்டப்பணிகள் 58 சதவீதம் முடிந்துவிட்டது என மாநகராட்சி கூறியுள்ளது.

Update: 2022-07-21 11:27 GMT

மும்பை, 

மும்பை கடற்கரை சாலை திட்டப்பணிகள் 58 சதவீதம் முடிந்துவிட்டது என மாநகராட்சி கூறியுள்ளது.

கடற்கரை சாலை திட்டம்

மும்பை மெரின் டிரைவ் பகுதியில் இருந்து தகிசர் வரை கடற்கரை சாலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டப்பணிகளின் கீழ் கடற்கரையையொட்டி சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, மேம்பாலம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்மும்பை பிரின்சஸ் ெதருவில் இருந்து பிரியதர்ஷினி பார்க் பகுதி வரை 2.1 கி.மீ. தூரத்திற்கு சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி அதிநவீன எந்திரத்தை பயன்படுத்தியது.

58 சதவீதம் முடிந்தது.

இந்தநிலையில் கடற்கரை சாலை திட்டப்பணிகள் 58 சதவீதம் முடிந்துவிட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கடற்கரை சாலை திட்ட தலைமை பொறியாளர் சக்ரதார் கன்டல்கர் கூறுகையில், "தற்போது 42 சதவீத திட்டப்பணிகள் மட்டுமே முடிக்கப்படாமல் உள்ளது." என்றார்.

2022-23-ம் நிதி ஆண்டின் இறுதிக்குள் கடற்கரை சாலை திட்டப்பணிகளை 90 சதவீதம் முடிக்க உறுதி எடுத்து உள்ளோம் என மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறினார்.

கடற்கரை சாலை திட்டப்பணிகளை 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது பணிகளை முடிக்க மேலும் ஒரு ஆண்டு ஆகலாம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்