மும்பை- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்
கேரளா வழியாக மும்பை- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது.;
மும்பை,
கேரளா வழியாக மும்பை- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்
பண்டிகை காலம் என்பதால் மும்பையில் இருந்து தமிழகம் செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. இந்தநிலையில் கொங்கன் ரெயில்வே மும்பை - கன்னியாகுமரி இடையே கேரளா வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக கொங்கன் ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இன்று (வியாழக்கிழமை) பகல் 3.30 மணிக்கு சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்:01461) நாளை இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
இதேபோல 24-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (01462) மறுநாள் இரவு 11 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. வந்தடையும்.
நின்று செல்லும் இடங்கள்
சிறப்பு ரெயில் தாதர், தானே, பன்வெல், ரோகா, சிப்லும், ரத்னகிரி, கன்காவ்லி, சிந்துதுர்க், சாவந்த்வாடி ரோடு, மஜ்காவ் சந்திப்பு, கர்வார், உடுப்பி, மங்களூரு சந்திப்பு, காசர்கோடு, கண்ணூர், தெலிச்சேரி, கோழிக்கோடு, சோரனுர், திரிச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், காயங்குளம், கொல்லம், திருவனந்தபுரம், குளித்துறை, நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.