சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் முதியவர் விடுதலை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் முதியவர் விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-09-10 18:45 GMT

மும்பை, 

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் முதியவர் விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமி கர்ப்பம்

மும்பையை சேர்ந்த சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. அதே ஆண்டு சிறுமிக்கு குழந்தையும் பிறந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின்போது சிறுமி முதலில் ஒரு சிறுவனுடன் ஏற்பட்ட உறவு காரணமாக கர்ப்பம் தரித்ததாக தெரிவித்தார். பின்னர் தனது தாத்தா தான் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சிறுமியின் 60 வயது தாத்தா மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்தனர்.

முதியவர் விடுதலை

இந்த வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் சிறப்பு கோர்ட்டு முதியவரை விடுவித்தது. இது தொடர்பான தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- விசாரணையின்போது சிறுமி வெவ்வேறு கட்டத்தில் வெவ்வேறு பெயர்களை கூறியுள்ளார். அவரின் வாய்வழி ஆதாரம் நம்ப தகுந்ததாக இல்லை. அதற்கு சாட்சியும் இல்லை. பாதிக்கப்பட்ட சிறுமி தனது மாதவிடாய் சுழற்சி நின்றது குறித்து தோழியிடம் கூறியுள்ளார். அவருடைய தாயின் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கும் சென்றுள்ளார். ஆனால் அவரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவிக்கவில்லை. அவரது நடவடிக்கை குற்றவாளியை மறைக்கும் முயற்சியாக தோன்றுகிறது. குற்றவாளி சிறிதுகாலம் வீட்டைவிட்டு வெளியேயும் தங்கி உள்ளார். அப்போது கூட நடந்த சம்பவம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் அரசு தரப்பு முதியவரின் மீதான தவறை நிரூபிக்க தவறிவிட்டது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்