நோய் வாய்ப்பட்ட மனைவியை கொன்று முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை - புனேயில் பரிதாபம்

புனே சுக்ருவார் பேத் பகுதியை சேர்ந்த முதியவர் ஹேமந்த் இவர் தனது மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-06-19 01:15 IST

புனே, 

புனே சுக்ருவார் பேத் பகுதியை சேர்ந்த முதியவர் ஹேமந்த் (வயது64). இவரது மனைவி சுனிதா (58). நேற்று காலை இவர்களது வீடு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்தனர். இதில் சுனிதா படுக்கையில் பிணமாகவும், ஹேமந்த் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசாரின் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கடந்த சில தினங்களாக சுனிதாவிற்கு உடல் நலம்பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதன் காரணமாக ஹேமந்த் மனைவியை கொன்று தற்கொலை செய்து இருக்கலாம் என கருதுகின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் சுனிதாவின் உயிரிழப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்