தலசேரி சுங்கச்சாவடி அருகே குஜராத் அரசு பஸ் மீது கிரேன் மோதல்; ஒருவர் பலி

தலசேரி சுங்கசாவடி அருகே குஜராத் அரசு பேருந்து மீது கிரேன் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்;

Update:2023-10-23 00:30 IST

வசாய், 

மராட்டிய எல்லை பகுதியான பால்கர் மாவட்டம் தலசேரி சுங்கச்சாவடி அருகே நேற்று அதிகாலை 3 மணி அளவில் குஜராத் மாநிலத்தின் அரசு பஸ் ஒன்று 35 பயணிகளுடன் சென்றது. அப்போது அந்த வழியாக வந்த கிரேன் ஒன்று சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதனால் கிரேனை பின்புறமாக எடுத்து திருப்பிய போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிரேனில் இருந்த கிளீனர் படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்த தலசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த கிளீனரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்