பப்பு கலானி எம்.எல்.ஏ.வின் உதவியாளர் தற்கொலை வழக்கு; தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உள்பட 4 பேர் கைது

தானேயில் பப்பு கலானி எம்.எல்.ஏ.வின் உதவியாளர் தற்கொலை வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உள்பட 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர்

Update: 2023-08-19 19:45 GMT

தானே, 

பா.ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பப்பு கலானியின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றி வந்தவர் உல்லாஸ்நகரை சேர்ந்த நந்தகுமார். இவரது மனைவி உஜ்வாலா. நந்தகுமார் கடந்த 1-ந்தேதி தனது மனைவியுடன் பங்களா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். நந்தகுமாரின் கால்சட்டையில் கடிதம் ஒன்று இருந்ததை கைப்பற்றினர். இதில் 4 பேர் சேர்ந்து எங்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், இதன்காரணமாக தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் அதில் எழுதி இருந்தது. மேலும் அவர்களின் பெயர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது. இதில் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ. பாலாஜி கினிகரின் உதவியாளர் சசிகாந்த் சாத்தே, தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கமலேஷ் நிகம், தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலக நிர்வாகி நரேஷ் கெய்க்வாட், மருந்து துறை அதிகாரி கணபதி காம்ளே ஆகியோரின் பெயர்களும் குறிப்பிட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், 4 பேர் மீது தற்கொலைக்கு துண்டியதாக வழக்கு பதிவு செய்ததுடன், அவர்களை கைது செய்தனர். பின்னர் உல்லாஸ்நகர் கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்தி வருகிற 24-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்