வசாய்,
தானே மாவட்டம் மிராபயந்தர் பகுதியை சேர்ந்த பான்வியாபாரி, ஒருவர் மிராபயந்தர்- வசாய்விரார் கமிஷனரகத்தின் நவ்கர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் அமித் பாட்டீலை சந்தித்து குட்கா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருக்கும்படி கேட்டு உள்ளார். இதற்கு அவர் மாதம் ரூ.16 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதற்கு பான் வியாபாரி ரூ.10 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் பான் வியாபாரி ரூ.10 ஆயிரத்தை போலீஸ்காரர் அருகில் இருந்த அமித் மிஸ்ரா என்பவரிடம் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து பணத்தை கொடுத்தபோது அதைபெற்ற அமித் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீஸ்காரர் அமித் பாட்டீலையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.