சர்ச்சையில் சிக்கிய நுபுர் சர்மாவுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு

நபி நாயகம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ராஜ் தாக்கரே பேசி உள்ளார்.;

Update:2022-08-23 16:54 IST

மும்பை,

நபி நாயகம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ராஜ் தாக்கரே பேசி உள்ளார்.

ராஜ் தாக்கரே ஆதரவு

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இன்று மும்பையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசினார். அவர் கூறியதாவது:-

நுபுா் சர்மா ஒரு கருத்தை பேசினார். அவரை அவர்கள் இடைநீக்கம் செய்தார்கள். ஒவ்வொரு நபரிடமும் மன்னிப்பு கேட்டார்கள். நான் அவர் பக்கம் பேசுகிறேன். அவர் மனதில் பட்டதை பேசவில்லை. நடந்ததை பற்றி பேசினார்.

ஜாகீர் நாயக் பேட்டி

இந்தியாவில் இருந்து தப்பி சென்று தலைமறைவாக உள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் பேட்டிகளை பாருங்கள். ஜாகீர் நாயக் இஸ்லாமியர். அவர் தனது பேட்டிகளில் நுபுர் சர்மா சொன்ன அதே விஷயங்களை தான் கூறுகிறார். ஆனால் ஜாகீர் நாயக் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என யாரும் கூறவில்லை. நீங்கள் அதை பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டீா்கள்.

இவ்வாறு அவர் பேசி உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்