மும்பை புறநகர் கலெக்டராக ராஜேந்திர போஸ்லே நியமனம்

Update:2023-02-16 00:15 IST

மும்பை, 

மராட்டிய அரசு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உள்ளது. அதன்படி மும்பை புறநகர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக ராஜேந்திரா போஸ்லே நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் இதற்கு முன்பு சோலாப்பூர் மற்றும் அகமதுநகர் மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றியுள்ளார்.

மும்பை புறநகர் கலெக்டராக இருந்த நிதி சவுத்ரி வருமான வரி இணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் ராய்காட் மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றியபோது அங்கு ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை திறம்பட செய்ததால் மாநில அரசின் பாராட்டுகளை பெற்றவர். இதனால் அப்போதைய மந்திரியாக இருந்த ஆதித்ய தாக்கரேவின் பரிந்துரையின் பேரில் மும்பை கலெக்டராக நியமிக்கப்பட்டவர்.

நகர தொழில் வளர்ச்சி கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தீபா முதோல் முண்டே பீட் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டு உள்ளார். அகமது நகர் கலெக்டராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்தார்த் சாலிமத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்