சிங்காட் கோட்டையில் காணாமல் போன மலையேற்ற வீரர் பிணமாக மீட்பு

சிங்காட் கோட்டையில் காணாமல் போன மலையேற்ற வீரர் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-06-26 16:56 GMT

புனே, 

புனேயில் உள்ள சிங்காட் மலை கோட்டைக்கு கடந்த சனிக்கிழமை 300 பேர் கொண்ட மலையேற்ற வீரர்கள் குழு சென்றது. அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்ட நிலையில் மாலை 5 மணி அளவில் தங்கள் குழுவை சேர்ந்த ஹேமங் காலா என்பவர் காணாமல் போனதை உணர்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மலையேற்ற வீரர்கள் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கும், காலாவின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் சம்பவ இடத்திற்கு வந்து காணாமல் போன மலையேற்ற வீரரை தேடும் பணியில் இடுபட்டனர்.

அப்போது அங்குள்ள 150 அடி பள்ளத்தாக்கில் பாறைகளுக்கு இடையே பிணமாக கிடந்த ஹேமங் காலாவின் உடலை போலீசார் மீட்டனர். மலையேற்றத்தின்போது பாறை சரிந்து விழுந்ததால் ஹேமங் காலா பள்ளத்தாக்கில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்