புதரில் கிடந்த வாலிபர் உடல் மீட்பு

பால்கரில் புதரில் கிடந்த வாலிபர் உடல் மீட்கப்பட்டது. அவரை கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2022-06-18 19:51 IST

வசாய், 

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே புதரில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு ஆய்வு நடத்தினர். உடலில் காயம் இருந்ததால் கொலை செய்யப்பட்டு வீசி சென்றது தெரியவந்தது.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்டவர் சிஞ்ச்பாடா பகுதியை சேர்ந்த பவன் முலிக் (வயது29) என்பது தெரியவந்தது. இவரை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்