தானே,
பால்கரை சேர்ந்த ஒருவர் அவர் நிலத்தின் ஆவணங்களை புதுப்பிக்க விரும்பினார். இதற்காக அவர் வாடா பகுதி வருவாய் துறை வட்டார அதிகாரியை சந்தித்தார். அப்போது அதிகாரி ஆவணங்களை புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுதொடர்பாக அந்த நபர் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார்.
பின்னர் அவர் அதிகாரிகள் கொடுத்த யோசனையின்படி வருவாய் துறை அதிகாரியை அவரது அலுவலகத்தில் சந்தித்து ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் வருவாய் துறை அதிகாரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.