குஜராத்தில் இருந்து டெம்போவில் கடத்தி வந்த ரூ.48 லட்சம் குட்கா பறிமுதல்; டிரைவர் கைது

குஜராத்தில் இருந்து டெம்போவில் கடத்திவரப்பட்ட ரூ.48 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்

Update: 2023-09-24 19:00 GMT

வசாய், 

பால்கர் மாவட்டம் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வெளிமாநிலத்தில் இருந்து மராட்டியத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் மராட்டிய மாநில எல்லை பகுதியான தலசேரி சுங்கச்சாவடி அருகே வாகனங்களை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் அங்கு வந்த டெம்போ ஒன்றை போலீசார் வழிமறித்தனர். அதில் நடத்திய சோதனையில் 20 பெரிய பிளாஸ்டிக் பைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டனர். அதனை பிரித்து பார்த்ததில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.48 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவர் ராஜூ உர்காடே (வயது34) என்பவரை கைது செய்தனர். இவர் குஜராத் மாநிலத்தில் இருந்து புனேவிற்கு குட்கா கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்