மும்பை,
மும்பையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நகரில் 101.3 பாரன்ஹீட் வெப்ப நிலையும், நேற்று 101 பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது. இந்தநிலையில் நேற்று அரபிக்கடலில் உருவான 'பிப்பர்ஜாய்' புயல் காரணமாக மும்பையில் அலை சீற்றம் அதிகமாக இருந்தது. மெரின் டிரைவ், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் கரையை தாக்கின. ராட்சத அலையை பொதுமக்கள் கரைகளில் இருந்து பார்த்து மகிழ்ந்தனர். பலர் ராட்சத அலையில் விளையாடி மகிழ்ந்தனர்.
இந்தநிலையில் மாலை நேரத்தில் மும்பையில் தாதா், தாராவி, சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. நகரின் சூட்டை தணித்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.