தானேயில் திருடன் என நினைத்து வாலிபர் அடித்து கொலை- 8 பேர் கைது

தானேயில் திருடன் என நினைத்து வாலிபரை அடித்து கொலை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-28 18:45 GMT

தானே, 

தானேயில் திருடன் என நினைத்து வாலிபரை அடித்து கொலை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருடன் என நினைத்து தாக்குதல்

தானே காசர்வடவிலி பகுதியில் சம்பவத்தன்று இரவு 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிக்கொண்டு இருந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாலிபர்களை திருடர்கள் என நினைத்தனர். அவர்கள் வாலிபர்களை பிடித்தனர். வாலிபர்களின் ஆடைகளை கழற்றி கை, கால்களை கட்டினர்.

பின்னர் அவர்கள் இரவு முழுவதும் வாலிபர்களை இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வாலிபர்களிடம் இருந்த ரூ.1,100-ஐ பறித்து உள்ளனர். மறுநாள் காலை அவர்கள் 2 பேரையும் விடுவித்து உள்ளனர்.

8 பேர் கைது

இந்தநிலையில் குடியிருப்புவாசிகளால் தாக்கப்பட்ட வாலிபர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காசர்வடவிலி பகுதியை சோ்ந்த 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடன் என நினைத்து வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தானேயில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்